கிருஷ்ணகிரியில் பரபரப்பு... 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - 3 பேர் கைது.!
three peoples arrested for forced marriage in krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதஷ். கடந்த 3ஆம் தேதி இவருக்கும் 14 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மாதேஷும், 14 வயது சிறுமியும் நேற்று முன் தினம் மலைக் கிராமத்துக்கு வந்துள்ளனர்.
இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லாததால் அவரை கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை மாதேஷின் வீட்டிலிருந்து தப்பியோடிய சிறுமி, அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட மாதேஷின் உறவினர்கள், பாட்டி வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், சிறுமியின் பாட்டி, தேனிகனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா ஆகியோரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for forced marriage in krishnagiri