ரேஷன் கடைகளை சூறையாடிய காட்டு யானைகள் - நீலகிரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு கட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பதிவேடுகள், விற்பனை முனைய எந்திரத்தை வெளியே தூக்கி வீசி உடைத்து சேதப்படுத்தியது. 

அத்துடன், அங்கிருந்த அத்தியாவசிய பொருட்களை தின்றன. இருப்பினும், பரிசுத்தொகுப்புக்கான பச்சரிசி, கரும்பு போன்றவை உள் அறைக்குள் பாதுகாப்பாக இருந்ததால், அதை வெளியே எடுக்க முடியாமல் காட்டு யானைகள் சிரமப்பட்டன. 

இதற்கிடையே இந்த சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் காட்டு யானைகள் வரக்கூடிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elephants broke ration shop in neelakiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->