மணல் குவாரி விவகாரம்: நீர்வளத்துறை என்ஜினீயரிடம் அமலாக்கத் துறை விசாரணை!
enforcement department investigates water resources department engineer
தமிழகத்தில் அரசின் நீர்வளத்துறை மணல் விற்பனையை நேரடியாக செய்து வருகிறது. அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை நடைபெறாமல் ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு மணல் குவாரிகளில் விற்பனை செய்யப்படும் மணல் அளவு அதற்கான பில் போன்றவற்றை சமர்ப்பிக்கும் படி கேட்டனர்.
இது தொடர்பாக நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முதன்மை செயல் பொறியாளர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுவரையில் அதிகாரிகள் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்யப்பட்ட அளவு, அதற்கான பில் போன்றவை குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
enforcement department investigates water resources department engineer