போதையில் விபரீதம் - ஓடும் ரெயில் முன்பு "செல்பி"... என்ஜினீயர் பலி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஓடும் ரயில் முன் போதையில் செல்பி எடுக்க முயன்ற இன்ஜினீயர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் காங்கேயத்தான் (22). இவர் பொறியியல் படித்துள்ள இவர், நேற்று தனது நண்பர்களான மூன்று பேருடன் சேர்ந்து வாழப்பாடி அருகே சேலம்-விருதாச்சலம் ரயில் பாதையின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்பொழுது அவ்ழியாக பெங்களூர் செல்லும் ரயில் வந்துள்ளது. 

இதைப்பார்த்த காங்கேயத்தான் போதையில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer killed while trying to take selfie in front of running train in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->