முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி எம்பி வேட்பாளர்!
England MP Candidate thank to CM Stalin
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இங்கிலாந்து நாட்டின் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி எம்பி வேட்பாளர் அல் பிங்க்கர்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் வருகின்ற ஜூலை மாதம் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் தமிழக அரசால் நிறுவப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுக் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை அமைந்திருக்கும் கேம்பர்லி பகுதியை உள்ளடக்கிய சர்ரே ஹீத் தொகுதியில், லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி சார்பில் அல் பிங்க்கர்டன் போட்டி இடுகிறார்.
இந்த நிலையில், இந்த பென்னிகுக் சிலையின் அருகில் நின்று புண்ணகைப்படம் எடுத்துக்கொண்ட அல் பிங்க்கர்டன், பென்னிகுக் சிலையை நிறுவியதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள அவர் பிறந்த ஊரான கேம்பர்ளி உள்ள மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டது.
வரலாறு : ஆங்கிலேய பொறியாளரான ஜான் பென்னிகுவிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்துக்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.
அன்று ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு இந்த திட்டத்துக்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், ஜான் பென்னிகுவிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15-ந்தேதியை தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு, தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றித்தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
England MP Candidate thank to CM Stalin