ரூ.6000 போதுமா? 12 ஆயிரம் கோரும் எடப்பாடி பழனிச்சாமி!
EPS ADMK ChennaiFloods2023 TamilNadu TNGovt
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்தி குறிப்பில், "வெள்ள நீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் மக்கள் ஒரு வாரமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை. திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைபாட்டால் அனைத்து உடமைகளையும் பொதுமக்கள் இழந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு முமாம்களை நடத்தி அரசு செலவில் பழுது நீக்கி தர வேண்டும். மணலி, எர்ணாவூர், பகுதிகளில் எண்ணெய் கழிவால் பாதித்த மக்களுக்கு கூடுதலாக ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
EPS ADMK ChennaiFloods2023 TamilNadu TNGovt