மதுரையில் பரபரப்பு - எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்கள் கிழிப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் பரபரப்பு - அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்கள் கிழிப்பு.!

இன்று மதுரையில் ரிங் ரோடு பகுதியில் அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள், மதுரையை நோக்கி படையெடுத்தனர். 

மாநாட்டில் பங்கேற்க, எடப்பாடி பழனிசாமி நேற்று இரவே மதுரை நோக்கி வந்த நிலையில் இன்று காலை 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுகவின் பிரமாண்ட கொடியை ஏற்றினார். அப்போது, 600 கிலோ பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளியில் இருந்து தூவப்பட்டன. 

இப்படி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அங்கங்கு சில அசம்பாவித சம்பவங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன. அதாவது, அதிமுக மாநாடு நடைபெறும் மண்டேலா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒட்டபட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நிறைந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. 

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடக்கும் முதல் அதிமுக மாநாடு இது என்பதால், அவரது எதிரணியாக கருதப்படும் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணியினர் இந்த செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிமுகவினர் சந்தேகிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு உற்சாகம் குறையாமல் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS baner torn in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->