இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிவிட்டது - எடப்பாடி பழனிசாமி வேதனை! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஜெகன் (வயது 28) என்பவரும், புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (வயது 21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற சரண்யாவை அழைத்து சென்று ஜெகன் திருமணம் செய்துள்ளார். 

இந்நிலையில், சம்பவம் நடந்த இன்று காலை, கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை, பெண் வீட்டாரின் உறவினர்கள் வழிமமறித்து நடுரோட்டில் படுகொலை செய்தனர். 

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்கட்சி தலைவர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி\சாமி விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.

அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது" என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Condemn To Krushanagiri love marriage murder case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->