#Breaking:: புவனகிரி அதிமுக எம்எல்ஏ கைதுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு கடலூர் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் என்எல்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியை பார்வையிடுவதற்காகவும், அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் சென்ற நிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கைது செய்ததற்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என்எல்சி நிறுவனத்தின் கைப்பாவையாக மாறி தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி உள்ள இந்த விடியா திமுக அரசு என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மக்களை அவர்களது வீட்டிலேயே காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது வெட்கக்கேடானது. 

இதனை எதிர்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் உள்ளிட்ட பலரை கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns arrest of Bhuvanagiri AIADMK MLA


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->