காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி! நோட்டிஸ் அடித்த திமுக உடன்பிறப்பு! - Seithipunal
Seithipunal



ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : தற்போது மூன்றாவது சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை பெறுவதை முன்னிட்டு, திமுகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாகவே அறிவித்து, திமுகவினர் நன்றி தெரிவித்து நோட்டீஸ் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி வடிவேல் என்பவர், இந்த நோட்டீசை தற்போது வழங்கி வருகிறார்.

அதில் தமிழக முதல்வர் தளபதியாரின் ஆசியுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை வழங்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி" என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 DMK notice issue cong win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->