ஆசிரியை வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய மர்ம கொள்ளையர்கள்! போலீசார் தீவிரம்!
erode near home robbery police inquiry
ஈரோடு, தெற்கு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 47) இவரது கணவர் லட்சுமி நாராயணன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இவர்களது ஒரே மகன் ஹரிஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீவித்யா கடந்த 9 ஆம் தேதி உறவினார் வீட்டு திருமணத்திற்காக சென்னை சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவித்யா வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து 17 சவரன் நகை மற்றும் ரூ. 8000 பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
உடனே ஸ்ரீவித்யா இது குறித்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது ஸ்ரீவித்யாவின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
erode near home robbery police inquiry