பள்ளி மாணவி வன்கொடுமை! மூடி மறைக்க முயன்ற திமுகவின் பெரும் புள்ளி!
Erode School Girl abused case DMK Amutha behind
ஈரோடு அருகே பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஐந்து பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவியை வன்கொடுமை செய்த 17 வயது மாணவன் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வன்கொடுமை சம்பவத்தை மறைக்க முயன்றதாக சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர், பள்ளி அலுவலக உதவியாளர் உள்ளிட்டோர்கள் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வன்கொடுமை சம்பவத்தை மறைக்க முயன்றதாக, கிளாம்பாடி திமுக பேரூராட்சி தலைவர் அமுதா மீதும் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதும், அதனை திமுகவின் பெரும் புள்ளி ஒருவரே மூடி மறைக்க முயன்றதும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவிக்கும், அவரின் பெற்றோருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
English Summary
Erode School Girl abused case DMK Amutha behind