இனி வாரத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு இது கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!
Every Friday physical education compulsory for school students
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'உடற் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு கட்டாயமாக நடத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு உடல் திறனாய்வுத் தேர்வை நடத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும். மாணவ, மாணவியர் என இரு அணிகளாக பிரித்து அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சிக்கான பாடக்குறிப்புகள், விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி, விளையாட வைத்த பதிவேடு, உடல் திறனாய்வு தேர்வு பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி பராமரித்து அதிகாரிகளின் ஆய்வில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Every Friday physical education compulsory for school students