ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம்..காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சென்னை வருகை!
EVKS Elangovan to be cremated this evening Senior Congress leaders arrive in Chennai
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. இந்த தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது.
மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தொண்டர்கலின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
EVKS Elangovan to be cremated this evening Senior Congress leaders arrive in Chennai