பரிசுகளை கொடுத்து போலி வெற்றி பெற முயற்சி - திமுகவைத் தாக்கிய ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதற்கிடையே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தலைமையில் இன்று கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,"ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.

பணம், படை பலத்தை கொண்டு மக்களுக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற முயற்சி செய்யும். ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.வே நிச்சயம் வெற்றி பெறும். அது நடக்காது என்பதால் தான் இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex formar minister jayakumar speech about admk participate vikravandi by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->