அதிமுகவை விமர்சிக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அருணை சந்தித்து பேசினார். அதன் பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு காவல் ஆணையரிடம் மனு கொடுத்தோம். அவரும் உரிய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. மிகப்பெரிய ஒரு ஜனநாயக கட்சி. இவ்வளவு பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அது சகோதரர்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவம். சரியாகிவிடும். அதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை. அவர்களது கட்சியிலும் இதுபோல சம்பவங்கள் நடந்துள்ளது. தனது முதுகை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களை தவிர்த்து வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister jayakumar press meet in chennai commissioner office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->