அரசியலுக்கு அஜித்குமார் வந்தால் வரவேற்போம் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவிக நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது:-

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பிரச்சினை வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் கூட 26 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு நாள்கூட செயலிழந்தது கிடையாது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயலிழக்க காரணம் என்ன?; மாற்றி மாற்றி வாக்குப்பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியாகத்தான் உள்ளது.

தொழிலாளர் தினத்தில் பிறந்த சகோதரர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக அஜித்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான நன்றியை நான் சொல்வேன். அவர் ஒரு தைரியசாலி; கோழைகளை எனக்கு பிடிக்காது. தைரியசாலியை தான் பிடிக்கும். விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் அதை விரும்புவீர்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு ஜெயக்குமார், ‛‛நல்லது செய்வதற்கான பரந்த களம் என்பது அரசியல்தான். அப்படிப்பட்ட களத்திற்கு அஜித்குமார் வந்தால் கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex minister jayakumar press meet in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->