அகழாய்வில் ஆச்சர்யம்!...நட்சத்திர வடிவில் கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே  விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று  வரும் நிலையில், இந்த அகழாய்வில் இதுவரை சுடுமண் காதணி, சுடுமண் பொம்மைகள் மற்றும் , சங்கு வளையல்கள் செய்ய பயன்படுத்திய மூலப்பொருள், புகைப்பான் கருவி, செங்கல்கள், எலும்புகள், தீப விளக்குகள், செவ்வந்தி கல், சில்லுவட்டுகள் உள்பட  ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஒருவித எலும்பால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவிலான மஞ்சள் நிற பழங்கால பெண்கள் ஆபரணம் தற்போது  வெம்பக்கோட்டை அகழாய்வில் 
கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு  அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய உள்ள நிலையில், இதன் மூலம் பழங்காலத்தில் பெண்கள் ஆபரணமாக பயன்படுத்தி இவற்றை இருக்கலாம் என தெரியவருகிறது.

இதே போல்  நீள் வட்ட வடிவிலான கலை நயத்துடன் செய்த சுடுமண் பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. மேலும், 3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய பழங்கால ஆபரணங்கள் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும், இதன் மூலம் இந்த பகுதியில் ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excavation surprise Do you know what that star shaped object was found


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->