தீபத் திருவிழா - அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.! - Seithipunal
Seithipunal


பிரபல சிவன் கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

அதாவது அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததனைத்தொடர்ந்து அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்தத் தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதி உலா மாட வீதியில் நடைபெறும். இந்த விழாவின் 6ம் நாளான வரும் 9ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான 10ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். 

இந்த மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி பயன்படுத்தப்படும். மகா தீபத்தை தரிசனம் செய்ய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fag hoisting in thiruvannamalai temple for karthikai deepam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->