நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு ஜி. கே. வாசன் கோரிக்கை!!
fair price shops make all produced available
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் அரிசி அட்டைதாரர்கள் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரித்து விலையில்லா பொருட்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், " தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கால தாமதமின்றி தட்டுப்பாடில்லாமல் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய ஜி. கே. வாசன், " நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் கால தாமதம் ஆகிறது என்றும், மேலும் பொருட்களின் தரமும், அளவும் குறைவாக உள்ளது என்றும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
குறிப்பாக துவரம்பருப்பு மற்றும் பாமாயில் இரண்டும் அதிகளவு தட்டுப்பாடு உள்ளது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர" என்று ஜி. கே. வாசன் கூறியுள்ளார். குறிப்பாக இந்த மே மாதத்தில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் இரண்டும் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
English Summary
fair price shops make all produced available