விளைந்த கரும்பை தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்., நம் தமிழகத்தில் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு  விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட்டிபாளையம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது,

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யாததால் கரும்பு சக்கையாக மாறியுள்ளது. வெளியிலும் விற்க முடியாமல் ஓராண்டு உழைத்து வளர்த்த கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கொமரலிங்கம் கரும்பு கட்டுப்பாட்டு பகுதியில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers burning sugarcane on fire Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->