தஞ்சாவூர் || வீட்டில் சுக பிரசவம் - குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அலையும் தந்தை.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் || வீட்டில் சுக பிரசவம் - குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அலையும் தந்தை.!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருடைய மனைவி சிவசங்கரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை 5 மணிக்கு வீட்டிலேயே சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

சிவசங்கரிக்கு பிரசவத்தின் போது அவரது கணவர் தினேஷ்குமார் உடனிருந்து உதவி செய்துள்ளார். திருமணமான பெண்கள் முதல் பிரசவத்திற்கு தனது தாய் வீட்டிற்கு செல்வது தான் வழக்கம். 

ஆனால் சிவசங்கரி சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள விரும்பியதால் வலங்கைமானில் உள்ள தனது  தாய் வீட்டிற்கு செல்லாமல் தான் விரும்பியபடி கணவர் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தினேஷ்குமாரின் வீட்டில் ஏற்கெனவே அவரது தங்கையும் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார்.  

இதேபோல், தினேஷ்குமாரின் சகோதரியான திவ்யா என்பவர் தலைப் பிரசவத்திற்கு தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அவரும் கடந்த மே மாதம் -17 ஆம் தேதி அன்று வீட்டிலேயே  சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தங்கை குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு தினேஷ்குமார் பதிவு செய்துள்ளார். ஆனால், வடபாதி கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் தருவதற்கு காலதாமதம் செய்கிறார்.

மேலும், சுகாதாரத்துறையும், காவல்துறையும் தொடர்ந்து அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகிறது. இதனால், தினேஷ்குமார்  பிறப்புச் சான்றிதழ் கோரி தொடர்ந்து போராடி வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father ask birth certificate to child born at home in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->