சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த "தோழர் பெலிக்ஸ்" டெல்லியில் கைது.!! - Seithipunal
Seithipunal


காவல்துறை உயர் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் இழிவாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம போலீசார் அரசியல் விமர்சகர் சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை மாநகர காவல் துறையினரால் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். 

நேற்று அவரை சென்னை மாநகர் போலீசார் அழைத்து வந்த நிலையில் தேனி மாவட்ட போலீசார் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் சவுக்கு மீடியா அலுவலகத்திலும் சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா, செல்போன், லேப்டாப், 2 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததோடு அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். 

இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீது கோவை செய்பவர்களின் போலசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீதும், பெலிக்ஸ் என்பவர் மீதும் கோவை சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் "பேட்டி கொடுத்தவரை விட பேட்டி எடுத்த வரை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும், தற்போது யூட்யூப் சேனல்களை நெறிமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது" என கருத்து தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட பெலிக்ஸிடம் விசாரணை நடத்தி தமிழகம் அழைத்து வர கோவை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Felix arrested by Coimbatore cyber crime in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->