சுதந்திரமாக கொடியேற்ற பாதுகாப்பு வேண்டும்.! எஸ்.பி.யிடம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி மனு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பேரையூரில் சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக தேசிய கொடியை ஏற்றவும், பிரச்சனையின்றி கிராம சபை கூட்டம் நடைபெறவும் பாதுகாப்பு வழங்க கோரி பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரையூர் அருகே எஸ்.கரிசல்பட்டியை சேர்ந்த வித்யா பழையூர் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கிராம சபை கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் தகராறு செய்கின்றனர்.

அதே போன்று இன்று நடைபெறும் கூட்டத்திலும் எதிரிகளால் தனக்கு  ஆபத்து இருப்பதாகவும் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை பட்டியல் இன மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female SC panchayat president give petition to SP provide security for flag hoisting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->