வலுவிழந்த ஃபெஞ்சல்! அடுத்த அவதாரம் - வானிலை ஆய்வு மையம் சொன்ன செய்தி!
Fenjal Cyclone now Depression
நேற்று இரவு புதுச்சேரி அடுத்த மரக்காணம் அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சுமார் 14 மணி நேரமாக கடலூர் அருகே மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், சில பகுதிகளில் மிக அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை:
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம்
English Summary
Fenjal Cyclone now Depression