இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியீடு.!
Final list of candidates 2022
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 1,374 உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளில் 3,843 உறுப்பினர் பதவியிடங்கள் மற்றும் 490 பேரூராட்சிகளில் 7,621 உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,838 பதவியிடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நேற்று முந்தினத்துடன் முடிவுற்றது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்வமுடன் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதி நாளான நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இதனால் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23, 354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,361 பேர் என மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. நாளை மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கால அவகாசம் முடிந்த உடன் மாலை 5 மணியளவில் வேட்பாளர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். வரும் 19 -ஆம் தேதி வாக்குப்பதிவும், 22- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Final list of candidates 2022