நிதி நிறுவன மோசடி வழக்கு : தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


கடந்த 1872ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில்  ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வரும் நிலையில், மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்பு தொகையாக, சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் என கூறப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணத்தை கேட்டு வந்ததுள்ளனர். ஆனால், நிதி நிறுவனம் சார்பில் முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜுன் மாதம் 6 ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

பின்னர் மயிலாப்பூர் போலீசாரின் அறிவுரைப்படி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுமார் 140 க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், 140 பேரிடம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் இந்த விவகாரத்தில் தேவநாதன் செய்யப்பட்டார்.இந்நிலையில், தேவநாதன் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Financial institution fraud case 3 kg gold seized from Devanathans office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->