தென்காசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் அருகே மைப்பாறையில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டடங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி, பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்று இந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident at firecrackers factory in thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->