கொழுந்துவிட்டு எரிந்த டீ தூள் குடோன் - கும்பகோணம் அருகே பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் குடோன் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.

இங்கு டீ துள்களை சேகரித்து வைக்கப்பட்டு பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடோனில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் டீ தூள் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்துக் குறித்து திருவிடைமருதூர் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident at tea shed in thiruvidaimaruthur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->