ஆசிரியர்கள் அறையில் திடீர் தீ!! கொளுத்தி போட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளி விடுமுறை மாணவர்கள் இல்லாமல் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் 2 அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் கருகி சேதமடைந்தது. தற்போது மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் இடை பருவத்தேர்வு எழுதியுள்ள நிலையில் ஆசிரியர்களின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆசிரியர்களின் ஓய்வு அறைகளின் பூட்டை உடைத்து மாணவர்களின் விடைத்தாள் தீட்டு கொளுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததால் அறையில் இருந்த விடைத்தாள்கள் மற்றும்  பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அரவக்குறிச்சி போலீசார் ஆசிரியர்கள் அறிக்கை தீயிட்டு கொளுத்தியது யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire incident at antipattikottai Govt School Karur District


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->