#விருதுநகர் : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 3 அறைகள் இடிந்து தரைமட்டம் - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ளது. இந்த பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதியாகி விட்டதால், கடந்த 10 நாட்களாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று இரவு பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் வைத்திருந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த பயங்கர வெடிவிபத்தில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர், மற்ற அறைகளுக்கும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fireworks factory explosion in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->