மதுரை : இந்தியாவிலேயே முதன் முறை.. இயன்முறை மருத்துவ மையத்தை தொடங்கியுள்ள திருநங்கை..!! - Seithipunal
Seithipunal



கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு வாய்ப்புகள் இன்றளவும் மறுக்கப் பட்டு வருவது மறுக்க முடியாதது. மேலும் அவர்களுக்கான மருத்துவங்களும் பெரும்பாலான இடங்களில் மறுக்கப்படுகின்றன. 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  சாத்துரைச் சேர்ந்த சோலு என்பவர் இயன்முறை மருத்துவம் படித்துள்ளார். திருநங்கையான இவர், கடந்த 6 ஆண்டுகளாக செல்லம்பட்டி வட்டார வள மையத்தில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான பிரிவில் தற்காலிக இயன்முறை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரிய இவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விட்டதால், சோலு மதுரை அண்ணாநகர் பகுதியில் தனது தாயின் பெயரில் ராலக்ஸ் இயன்முறை மருத்துவம் மற்றும் அழகியல் மையத்தை தானே சொந்தமாக திறந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் சோலு தெரிவிக்கையில், "திருநங்கை என்பதால் தான் நான் பல இடங்களிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளேன். எனவே எனது இந்த சிறிய அளவிலான கிளினிக்கில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இங்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும். 

மேலும் இங்கு திருநங்கைகளுக்கு பணி புரியும் வாய்ப்பும் எனது கிளினிக்கில் வழங்கப்படும். மேலும் எனது இந்த கிளினிக்கில் சிறப்பு குழந்தைகளுக்கான இயன்முறை சிகிச்சையும், பொதுமக்களுக்கான சிகிச்சையும் குறைந்த அளவில் வழங்கப் படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு சிகிச்சை அளிக்க பல மருத்துவமனைகளும் முன் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Time in India A Transgender Doctor Starts A Physiotherapy Clinic in Madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->