#BREAKING | தொடரும் அத்துமீறல், அராஜகம்! போராட்டத்தை அறிவித்த இராமேஸ்வரம் மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்பறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும் சிறைபிடித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சக மீனவர்கள், இலங்கை கடற்படையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது தான் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடி சீசன் தொடங்கியுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வரும் நிலையில், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதால் மீனவர்கள் பெரும் அச்சத்தை கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி இந்த போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர்

கடந்த மாதம் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fisher men's cross border Sri Lankan court issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->