சென்னை விமான நிலையத்திற்கு  அடுக்கு பாதுகாப்பு - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


ஜனவரி 26ம் தேதி அன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கொண்டாடபடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவு முதல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 5 அடுக்கு பாதுகாப்பு வரும் ஜனவரி 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் மோப்ப நாய்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலைய வளாகமும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரிகள், மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும், குறிப்பாக விமானங்கள் நிறுத்துமிடங்கள் உள்ள பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் இந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளையும் அதிகாரிகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதான் காரணமாக, உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்பும் பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five layer security in chennai airport for republic day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->