தேனி || காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை - மகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தேனி || காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை - மகள் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் வேணுகோபால் பாண்டியன். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளது.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் உயர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி, செல்வக்குமார், கண்ணப்பன் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், "காதல் விவகாரம் தொடர்பாக வீட்டில் பிரச்சினை எழுந்ததை அடுத்து, வேணுகோபால் பாண்டியனின் மகள் அவரது பாட்டியுடன் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு ஓட்டுநரான முத்துக்காமாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த வேணுகோபால் மகளை கண்டித்துள்ளார்.

காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருக்கும் வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய முத்துக்காமாட்சி சிறுமியின் உதவியுடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வேணுகோபாலின் மனைவி உமா மகேஸ்வரி, குற்றவாளிகளான முத்துக்காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள், அவர்களுக்கு உதவியாக இருந்த தனது மகளான 16 வயது சிறுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for attack man in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->