குறுக்கே வந்த பசு மாடு - நொடிப்பொழுதில் நடந்த கொடூரம்.!
five peoples died for accident in kalpakkam
சென்னையை அடுத்த வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருடைய நண்பர்களான சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ், ஏழுமலை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து இந்தக் கார் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதைப்பார்த்த ஓட்டுநர் மாடு மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பியதில் கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இருப்பினும், செல்லும் வழியிலேயே யுவராஜ் மற்றும் மற்றொரு வாலிபர் என்று இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples died for accident in kalpakkam