குமாரபாளையம்.! போதை பொருள் விற்பனை செய்த 5 பேர் கைது.!
Five persons arrested for drug trafficking in komarapalayam
குமாரபாளையத்தில் போதைப்பொருள்கள் விற்பனை செய்த 5 நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக குமாரபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து நகரின் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், கே.ஒ.என் தியேட்டர் அருகே ஹான்ஸ் பதுக்கி வைத்திருந்த நாகராஜ், ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்பிரமணி, ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து 32 ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து இவர்களின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Five persons arrested for drug trafficking in komarapalayam