பொங்கல் பண்டிகை : கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஐந்து டன் கரும்பு ஏற்றுமதி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூர் நாட்டிற்கு வாரத்தின் ஏழு நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகை என்பதால், ஷார்ஜா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விமானத்தின் மூலம் கரும்பு, மஞ்சள் மற்றும் வெல்லம் அனுப்பப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் மூன்று டன் எடையிலான சரக்குகள் வழக்கமாக கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில், இன்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்பு கொண்டு செல்வதற்கு புக்கிங் செய்யப்பட்டது. 

அதன் படி, கடந்த 8-ந் தேதி முதல் விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. ஆனால், விமானத்தில், முழு கரும்பு கொண்டு செல்வதற்கு அதிக இடவசதி தேவைப்படுவதால் 400 கிலோ குறைத்து 600 கிலோ கரும்பு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்து  நாட்களில் மொத்தம் பதினைந்து டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஐந்து டன் கரும்பு, இரண்டு டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five tonnes sugarcane export in sharja for pongal festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->