சென்னையில் சோகம் - மின்சாரம் தாக்கி ஒன்றாம் வகுப்பு மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கவுதம்- பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் ரூபாவதி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், சிறுமி ரூபாவாதி நேற்று மாலை தனது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து சிறுமி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரூபாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years old girl died in chennai for electric shock attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->