தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு எட்டு மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் நீடித்தது. 

இந்த நிலையில், சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதினைந்து விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த படி வருகின்றன.

மேலும், சென்னைக்கு வர வேண்டிய நான்கு விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight service affected for heavy rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->