வெள்ளப்பெருக்கு எதிரொலி!...கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை! - Seithipunal
Seithipunal


பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு  அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கும்பக்கரை அருவியில் வார விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்த நிலையில்,  அருவியில்  குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood echoes bathing in kumbakarai waterfall is prohibited


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->