கடல் போல் காட்சியளிக்கும் அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!
Flood in Amaravati River and Tourist Bath Banned in Panchalinga Falls
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் அமைந்துள்ளது அமராவதி அணை. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, கேரளா மற்றும் தமிழக வனப்பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகளை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி கடந்த ஜூன் 18ம் தேதி அமராவதி ஆற்றில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையில் நீர் வரத்தும் அதிகரித்து தற்போது 3 , 840 கன அடியாக வந்து கொண்டுள்ளது. எனவே அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும் 3, 673 கன அடியாக வெளியேற்றப் பட்டு வருகிறது.
இந்நிலையில் உடுமலை மாவட்டத்தில் சாரல் மழையும் பெய்து வருவதால், அங்கு திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடையை நீடித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இதனிடையே அணை அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இரவு, பகலாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பும் மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Flood in Amaravati River and Tourist Bath Banned in Panchalinga Falls