உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் பறக்கும்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபட்ட உள்ளார். இதற்காக அவர் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்துள்ளார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

அதில், ஹெலிகாப்டரில் பணமோ?, பரிசு பொருளோ? எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபின் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கு முன்னதாக, ராமநாதபுரம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flying squad check uthayanithi stalin helicopter


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->