சென்னை மெரினாவில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா - எப்போது ஆரம்பம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை முதல் வருகிற 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. 

இந்தத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படமின்றியும் தயாரித்து தகுந்த முறையில் விற்பனை செய்ய ஆறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food festival in chennai marinaa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->