#viral_video || திமுக அமைச்சருக்காக... பசியோடு காத்திருந்த மாணவர்களிடம் இருந்து சாப்பாடு தட்டுகள் பறிப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூரில் காலை உணவு திட்டத்தில் காலை உணவு சாப்பிட மாணவர் மாணவிகள் முன்பு வைத்திருந்த சாப்பாடுடன் கூடிய தட்டுகள் திடீரென பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று முதல் தமிழக முழுவதும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பட்டூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி.வி கணேசன் சரியான நேரத்தில் வந்து விடுவார் என அரசு அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் அமர வைத்து சாப்பாடு பரிமாறினர். ஆனால் அமைச்சர் சி.வி கணேசன் வர காலத்தாமதம் ஆனதால் உணவு பரிமாறப்பட்டும் உண்ண முடியாத சூழலில் பள்ளி குழந்தைகள் அந்த உணவை பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் சி.வி கணேசன் வர காலதாமதமானதால் பள்ளி குழந்தைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த சாப்பாடு தட்டு திரும்ப பெறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர் சி வி கணேசன் வந்த பிறகு மீண்டும் அவர் கையால் உணவு பரிமாறப்பட்டது.

இருப்பினும் காலையில் பசியுடன் அமர்ந்திருந்த பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு சாப்பாடு தட்டுகள் திரும்ப பெறப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food plates were taken away from the hungry students in cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->