கேரள அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. அதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அதனால், மீதமுள்ள பத்து அடி நீர்மட்டத்தை அணைப் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டிவிட்டு, பழைய அணையை இடிக்க வேண்டும் என்றும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக, முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை நாங்களே கட்டிக்கொள்கிறோம் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதியுள்ளது.

அதனை அமைச்சகம், நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நடக்கவுள்ள நிபுணர் மதிப்பீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formars strike against kerala government for mullai periyar bridge make


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->