முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ரம்ஜான் பண்டிகை வாழ்த்து!
Former Tamil Nadu CM V Narayanasamy greets people on Ramzan
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள ரம்ஜான் பண்டிகை வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:இஸ்லாமிய மக்களின் புனிதமான ரமலான் மாத நோன்பு நிறைவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த புனிதமான நோன்பு காலம் என்பது வெறும் பசித்திருப்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் உறுதியான மனக்கட்டுப்பாட்டையும் புலன்களையும் அடக்கி ஆளும் சக்தியினை பெறும் ஒரு முக்கிய ஆண்மீக நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த புனித நோன்புகாலம் முடிந்த பிறகு, ஈகை திருநாளாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியைப் போல், வேறு எதிலும் நமக்கு இன்பம் கிடைப்பதில்லை, என்பதின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் விளக்குவதற்காகவே, இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது, என்றால் அது மிகையல்ல.
எனவே இஸ்லாமிய மக்கள் தங்களால் இயன்ற உதவியை இந்த நன்னாளில் பிறருக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ, வாழ்த்துக்களை , இந்த ரம்ஜான் நன்னாளில் தெரிவித்துக் கொள்கிறேன் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
Former Tamil Nadu CM V Narayanasamy greets people on Ramzan