ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. 

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் தொடந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஃபார்முலா போர் கார் பந்தயம் நடத்த மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து அறிக்கையை தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

எஃப்.ஐ.ஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல், இந்த கார் பந்தயத்தை நடத்தக்கூடாது,  எஃப்.ஐ.ஏசான்றிதழ் இல்லாமல் பந்தயம் நடத்தினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 

மேலும், எஃப்.ஐ.ஏ சான்று வைத்திருந்தால், அந்த நகலை மனுதாரருக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formula 4 Chennai case Chennai HC


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->