பல்லடத்தில் வாலிபர் கொலை! பிரபல ரவுடி அக்னி ராஜ் கொலைக்கு பழிக்கு பழி! முக்கிய புள்ளிகள் 4 பேர் கைது!
Four arrested in case of youth hacked to death in Palladam
பல்லடத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் வினோத் கண்ணன். இவர் கடந்த ஜூலை எட்டாம் தேதி மர்ம கும்பலால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஓட ஓட விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு கொலையாளிகள் சரமாரியாக முகத்தை கத்தியால் சிதைத்தனர்.
இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து போலீசார் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் மீது மானாமதுரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, அடித்தடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் அக்னி ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதனை எடுத்து அக்னிராஜின் நண்பர்கள் பழிக்குப் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அக்னி ராஜ் என்ற வாட்ஸ்அப் குழு ஏற்படுத்திக் கொண்டு மைனர் மணி நண்பர்கள் ஆன ராமசிவம், அழகு, பாண்டி ஆகிய மூன்று பேரை ஏற்கனவே கொலை செய்தனர்.
இந்த நிலையில் அக்னி ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வினோத் கண்ணனை கடந்த ஜூலை 8 தேதி சரமாரியாக பல்லடத்தில் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் ஈரோடு, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றவாளிகள் இன்ஸ்டாகிராமில் குழு மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொலைபேசி மூலம் இவர்கள் எந்தவித தகவலையும் பரிமாறிக் கொள்வதில்லை என்பது போலீசார்க்கும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிதிஷ்குமார், காளீஸ்வரன் மற்றும் வினோத் கண்ணன் குறித்து தகவல் கொடுத்த சாமிநாதன், பிரபுதேவா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Four arrested in case of youth hacked to death in Palladam