சிக்கி பெரும் புள்ளிகள்! இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகள்! - Seithipunal
Seithipunal


இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட நான்கு கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய உண்மை. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கக் கட்டிகளை எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அந்த வழியாக வந்து வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் வந்து கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அந்த காரை நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்தை விசாரணையில் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு காரில் வந்தவர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்துள்ளனர்.

சோதனையில் காரில் நான்கு கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவை அனைத்தும் இலங்கையில் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது 

காரில் இருந்து சும்மா 4 கிலோ தங்க கட்டுகளில் அதிகாரிகள் பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four kg gold bars smuggled from Sri Lanka seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->